பருப்பு பிரதமன்
என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 100 கிராம்
வெல்லப் பாகு - 300 கிராம்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய தேங்காய் அல்லது உலர்ந்த கொப்பரை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை குக்கரில் குழைய வேகவைத்து மசிக்கவும். வெல்லத்தைச்
சிறிதளவு நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யைச்
சூடாக்கி, பல்லாக நறுக்கிய தேங்காயைச் சிவக்க வறுக்கவும். அதில்
வெல்லப்பாகு, வேகவைத்த பருப்பு வகைகள் சேர்க்கவும். நன்கு கொதித்து
வரும்போது ஏலப் பொடி தூவி இறக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர்
சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் பரிமாறும் முன் சிறிது தேங்காய்ப்
பால் சேர்க்கலாம். தேங்காய்ப் பால் சேர்த்துவிட்டால் விரைவில்
புளித்துவிடும் என்பதால், நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்த முடியாது.