வேப்பம்பூ மாங்காய்ப் பச்சடி
என்னென்ன தேவை?
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
கிளி மூக்கு மாங்காய் - 1
வெள்ளை வெல்லம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய், நெய் - தலா அரை டீஸ்பூன்
கடுகு, பெருங்காயம் - சிறிதளவு
வெந்தயம் - 1 சிட்டிகை
உளுந்து - அரை டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
உப்பு - சிட்டிகை
எப்படிச் செய்வது?
நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை மூழ்கும் அளவு நீர்விட்டு உப்பு, மஞ்சள்
பொடி சேர்த்து காய்கள் சிதையாமல் வேகவைக்கவும். வெல்லம் சேர்த்துக்
கொதிக்கவிட்டு, இட்லிமாவு பதத்தில் இறக்கவும். நெய், நல்லெண்ணெய்க்
கலவையைச் சூடாக்கி கடுகு, பெருங்காயம், வெந்தயம், உளுந்து, காய்ந்த
மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். வேப்பம்பூவைச் சேர்த்து
பொரித்து, மாங்காய்க் கலவையில் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்த்துப்
பரிமாறவும். நெய்யில் தாளிப்பதால் வேப்பம்பூவின் கசப்பு அடங்கும்.
No comments:
Post a Comment