வேர்க்கடலைக் கூழ்
என்னென்ன தேவை?
வேர்க்கடலை, வெல்லம் தலா 1 கப்
வாழைப்பழம் - 2
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த கடலையை நன்கு கழுவி
அதனுடன் வெல்லம், வாழைப்பழம் சேர்த்து மூன்றையும் தண்ணீர் விடாமல் நன்கு
அரைத்து எடுத்தால் நிலக்கடலை கூழ் தயார். இதை ஃபிரிட்ஜில் வைத்துச்
சாப்பிட்டால் ஐஸ்கிரீம் போல் இருக்கும். குழந்தைகள் விரும்பிச்
சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான உணவான இந்தக் கூழைக் காலை நேர
உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
No comments:
Post a Comment