அவல் வெங்காய வடாம்
என்னென்ன தேவை?
அவல் - 3 கப்
பச்சை மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - கால் கிலோ
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொதிக்கும் வெந்நீரில் அவலைப் போட்டுப் பிழிந்து எடுக்கவும். பச்சை
மிளகாயை அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை அவலில் கலக்கவும். சின்ன
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாகப்
பிசையவும். இதைச் சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து
எடுக்கவும்.
No comments:
Post a Comment