வெந்தயக் கீரைத் தொக்கு
என்னென்ன தேவை?
வெந்தயக் கீரை 4 கட்டு
சிறிய வெங்காயம் 1 கப் (நறுக்கியது) தக்காளி 3
பூண்டு 1
இஞ்சி 1 துண்டு
மிளகு 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
கடுகு, உளுந்து தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெந்தயக் கீரையைச் சுத்தம் செய்து அலசி, அரிந்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சிறு சிறு துண்டுகளாக
நறுக்கவும். வெறும் வாணலியில் மிளகை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில்
எண்ணெய் விட்டுக் கடுகு, உளுந்து தாளித்து, நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைச்
சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச்
சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பொடித்து வைத்துள்ள மிளகைத் தூவி, கிளறவும். உப்பைச் சேர்த்து, கடைசியாக
வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும். வெந்தயக் கீரையை
விரும்பாதவர்கள்கூட இந்தத் தொக்கை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும்
பெண்களுக்கு ஏற்ற உணவு. பெண்களின் மாதவிடாயைச் சீராக்கும். குளிர்ச்சியானது. தலைமுடி வளரத் துணைபுரியும்.
No comments:
Post a Comment